×

டாரெஸ் ஹாட்ரிக் மான்செஸ்டர் த்ரில் வெற்றி

இங்கிலாந்தில் நடைபெறும் பிரிமியர் லீக் கால்பந்து தொடரில், மான்செஸ்டர் சிட்டி அணி 4-3 என்ற கோல் கணக்கில் நியூகேஸல் யுனைட்டட் அணியை போராடி வென்றது. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் மான்செஸ்டர் வீரர் பெரான் டாரெஸ் 42வது, 64வது மற்றும் 66வது நிமிடங்களில் கோல் அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்தார். அந்த அணியின் கான்செலோ 39வது நிமிடத்தில் முதல் கோப் போட்டார். நியூகேஸல் யுனைட்டட் சார்பில் கிராப்த் (25’), ஜோலிண்டன் (45+6’), வில்லாக் (62’) கோல் போட்டனர். மான்செஸ்டர் சிட்டி அணி 83 புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. மான்செஸ்டர் யுனைட்டட் (70), லீசெஸ்டர் (66), செல்சீ (64) அணிகள் அடுத்த இடங்களில் உள்ளன.

Tags : Taurus Hatrick ,Manchester Thrill , Taurus Hatrick wins Manchester Thrill
× RELATED இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?